"அடுத்த ஹசரங்க ஆவதே எனது இலக்கு" - உலகின் முதல்தர சுழற்பந்து வீச்சாளரின் கருத்து

#Srilanka Cricket
Prasu
4 years ago
 "அடுத்த ஹசரங்க ஆவதே எனது இலக்கு" - உலகின் முதல்தர சுழற்பந்து வீச்சாளரின் கருத்து

அடுத்த முரளிதரன் அல்லது ரங்கன ஹேரத் ஆக விரும்பவில்லை என்றும், அடுத்த ஹசரங்க ஆவதே தனது இலக்கு என்றும் உலகின் முதல்தர சுழற்பந்து வீச்சாளரான வனிது ஹசரங்க தெரிவித்துள்ளார்.

எல்பிஎல் போட்டித் தொடர் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வனிது ஹசரங்க கருத்துத் தெரிவிக்கையில்...

"அணிக்காக என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன். அதனால்தான் என்னால் வெற்றி பெற முடிகிறது.

தேசிய அணி, அல்லது நான் விளையாடும் உரிமை அணி என, நான் பார்க்கவில்லை.

நான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது நூறு சதவீத பங்களிப்பை அணிக்கு எப்படிக் கொடுப்பது என்பதையே பார்க்கிறேன். "

“எனக்கு போட்டி அழுத்தம் எதுவும் இல்லை, எல்லாவற்றையும் ஒரு உத்வேகமாக எடுத்துக்கொள்கிறேன்.

எனவே எனக்கு அடுத்த முரளியாகவோ அல்லது அடுத்த ரங்கன ஹேரத் ஆகவோ விரும்பவில்லை. அடுத்த ஹசரங்க ஆவதே தனது இலக்கு என தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4